பேட்ஸ்மேனா மட்டுமில்ல பீல்டராகவும் உலகசாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா – அப்படி என்ன சாதனை தெரியுமா?

Rohit-Catch
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இந்த தொடரை ஏற்கனவே மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து கடைசி போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியானது மார்ச் 7-ஆம் தேதி துவங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 218 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 135 ரன்கள் குவித்துள்ளது.

இதன் காரணமாக 83 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நெருங்கி விட்டதால் நாளைய போட்டியில் மேலும் ரன் குவிப்பை வழங்கி இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாத சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் மார்க் வுட் கொடுத்த கேச்சை பிடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்படி ரோகித் சர்மா படைத்த சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு அவர் தான் காரணம்.. அதை யூஸ் பண்ணி ரோஹித் பின்னிட்டாரு.. ரோஜர் பின்னி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மூன்று வடிவிலான பார்மேட்டிலும் அதாவது ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று ஃபார்மேட்டிலும் குறைந்தது தலா 60 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் பல்வேறு வீரர்கள் நூற்றுக்கணக்கில் கேட்ச் பிடித்திருந்தாலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் குறைந்தது 60 கேட்ச்களை பிடித்த வீரராக ரோஹித் சர்மா இந்து சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement