
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று அக்டோபர் 24-ஆம் தேதி புனே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி தங்களது முதல் இன்னிங்சில் 259 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் காரணமாக 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் 60 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்த யாஷஸ்வி ஜெயஸ்வால் இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் நிழத்தாத சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது தற்போது 22 வயதே பூர்த்தி அடைந்துள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் 23 வயதாவதற்கு முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக சர்வதேச அளவில் இதுவரை 23 வயதிற்குள் 1000 டெஸ்ட் ரன்களை ஒரு ஆண்டில் அடித்தது நான்கே வீரர்கள் தான் என்கிற நிலையில் உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற மைல்களையும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : 142 வருஷத்துல இப்படி யாருமே பண்ணதில்ல.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பாகிஸ்தான் அணி – விவரம் இதோ
அதோடு இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் 1305 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 1007 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.