அதிகாலை 4.30 மணிக்கு போன் பண்ணி அழுதான். யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை அளித்த – நெகிழ்ச்சியான பேட்டி

Yashasvi-Jaiswal
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 2020-ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அறிமுக தொடரில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே பெற்ற அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் ஒரு சதம் உட்பட 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தினார்.

Yashasvi Jaiswal

- Advertisement -

துவக்க வீரரான இவர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி இடது கை ஆட்டக்காரராகவும் இருப்பதினால் இந்திய அணியில் இவருக்கு வெகு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் பாராட்ட துவங்கினர். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி தற்போது சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

அந்த வகையில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பிடித்த ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் அறிமுக துவக்க வீரராக களமிறங்கி 171 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சதம் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சதம் அடித்த பிறகு அதிகாலை நான்கு முப்பது மணிக்கு அவரது தந்தையுடன் ஜெய்ஸ்வால் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

Jaiswal

அந்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஜெய்ஸ்வாலின் தந்தை கூறியதாவது : ஜெய்ஸ்வால் எனக்கு இரண்டாவது நாளில் சதம் அடித்த பிறகு அதிகாலை நான்கு முப்பது மணி (4.30am) அளவில் ஃபோன் செய்தார். அப்போது சிறிது நேரம் அழுது கொண்டே இருந்தார். அவர் அழுததும் நானும் அழுதுவிட்டேன்.

- Advertisement -

எங்களுக்கு இது ஒரு நெகிழ்ச்சியான நேரமாக இருந்தது. ஜெய்ஸ்வால் நீண்ட நேரம் என்னிடம் பேசவில்லை. சோர்வாக இருப்பதனால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தார். என்னிடம் “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அப்பா”? என்று கேட்டார். நானும் என்னுடைய ஆசையை பூர்த்தி செய்து விட்டாய் என்று கூறியதாக ஜெயிஸ்வாலின் தந்தை பகிர்ந்துள்ளார்.\

இதையும் படிங்க : அந்த தருணத்தில் நிச்சயமா அழுதுடுவேன், இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடுவது பற்றி – ரிங்கு நெகிழ்ச்சி பேட்டி

முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இனி வரும் தொடர்களிலும் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரராக திகழ்வார் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement