IND vs WI : ஷிகர் தவானை மிஞ்ச முடியவில்லை என்றாலும் மாஸான சாதனையை நிகழ்த்தி அசத்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானதுதங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

Jaiswal

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 421 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 171 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய அவருக்கு கூடுதலாக ஒரு சில சாதனைகளும் கிடைத்துள்ளன.

Jaiswal and Rohit

அந்த வகையில் ஷிகார் தவானின் 187 ரன்கள் என்கிற சாதனையை அவர் தவறவிட்டிருந்தாலும் அறிமுகப் போட்டியிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரராக அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டியின் மொத்தம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியில் அதிக நேரம் களத்தில் நின்ற வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி படைத்த சாதனை – விவரம் இதோ

இதற்கு முன்னதாக முஹமது அசாருதீன் தனது அறிமுக போட்டியில் 443 நிமிடங்கள் களத்தில் நின்று பேட்டிங் செய்தார். அவரை மிஞ்சிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 501 நிமிடங்கள் பேட்டிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement