
இந்திய அணியானது தற்போது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட காத்திருக்கிறது. அதற்காக தற்போது கவுகாத்தி மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அதற்கடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது காயமடைந்த கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் அவர் ஒருநாள் தொடருக்குள் முழு உடற்தகுதியை பெற்று அணிக்கு திரும்புவாரா? அல்லது ஒருநாள் தொடரையும் அவர் தவற விட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் பி.சி.சி.ஐ அவரது உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துவதால் அவசரப்பட்டு அவரை விளையாட வைக்காது என்றே தெரிகிறது.
எனவே அவர் ஒருநாள் தொடரையும் தவறவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர் ஒருநாள் தொடரை தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக துவக்க வீரராக யார் விளையாடுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் ஒருவேளை சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டால் அவர்து இடத்தில் இளம் இடது கை ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.
ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வரும் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக துவக்க வீரருக்கான மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து பயணித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுப்மன் கில் தனது வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்றுவீராக இருக்கும் ஜெய்ஸ்வால் தான் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் முதல் முறையாக ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ
ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரும் பேசி வரும் வேளையில் சுப்மன் கில்லிற்கு ஏற்பட்டுள்ள காயத்தால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.