சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் முதல் முறையாக ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

Gill and Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்த சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு பெற்றுக் கொண்ட சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார். இருந்தாலும் அவர் கழுத்து வலி காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுப்மன் கில்லுக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு :

இதன் காரணமாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் துவங்கும் வேளையில் அந்த போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக முதல் முறையாக ரிஷப் பண்ட்டிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியை பெற்று கடந்த சில தொடர்களாகவே ரிஷப் பண்ட் விளையாடி வந்தார். இவ்வேளையில் முதன்மை கேப்டனான சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்படவே முதல் முறையாக அவர் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த காத்திருக்கிறார்.

அதோடு சுப்மன் கில் காயம் அடைந்து வெளியேறி இருப்பதால் அவரது இடத்தில் விளையாடப் போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் அவரது இடத்தில் தமிழக இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் விளையாடுவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு சாம்பியன் மாதிரி உணர்ந்தேன்.. சி.எஸ்.கே ஜெர்சியை முதன் முறையாக அணிந்து குறித்து – சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

ஏனெனில் முழுநேர பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் தனது திறனை நிரூபித்திருக்கும் வேளையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியானது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement