சுனில் கவாஸ்கரின் 53 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. சேவாக் உட்பட யாரும் செய்யாத சாதனை

Jaiswal 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நிறைவு பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. சென்னையில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா கான்பூரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல உங்களை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்தது. அதில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (51) ரன்களை 141.18 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (45) ரன்களை 113.33 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

- Advertisement -

சேவாக்கை முந்திய ஜெய்ஸ்வால்:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் சேவாக் 55 (46), 55 (55) ரன்கள் குவித்தார்.

அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் சேவாக் 55 பந்துகளில் 55 ரன்களை மிகச்சரியாக 100.00 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்திருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட (141.18, 113.33) ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்களை (71, 51) அடித்து மற்ற இந்திய வீரர்கள் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இப்போட்டியில் அடித்த 123 ரன்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 972 ரன்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கரை முந்திய ஜெய்ஸ்வால்

குறிப்பாக கடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் அவர் 712 ரன்கள் அடித்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதுக்குட்பட்ட இந்திய வீரர்களில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை ஜெய்ஸ்வால் உடைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1971ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 918 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 21 தொடர்கள்.. முத்தையா முரளிதரனின் வாழ்நாள் உலக சாதனையை சமன் செய்த.. இந்தியாவின் நாயகன் அஸ்வின்

தற்போது அந்த 53 வருட சாதனையை ஜெய்ஸ்வால் உடைத்துள்ளார். அந்த வகையில் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் ஜாம்பவான் சேவாக் போல அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் அவரை வருங்கால சூப்பர் ஸ்டார் வீரர் என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement