118 ரன்ஸ்.. 23 வயதில் ரவி சாஸ்திரி, சச்சினின் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. பந்தாடும் இந்தியா

Jaiswal 2
- Advertisement -

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் இந்தியா 224 ரன்கள் அடித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்து 23 ரன்களை முன்னிலை பெற்றது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 7, சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்தார். அவருடன் நைட் வாட்ச்மேனாக சேர்ந்த ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி இங்கிலாந்தை கடுப்பேற்றி தனது முதல் அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல மிகவும் சிறப்பாக விளையாடிய அவர் 3வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 66 ரன்களை விளாசி அவுட்டானார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

அடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில் 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் இந்தப் பக்கம் சில கேட்ச்கள் கொடுத்ததை இங்கிலாந்து தவற விட்டதை பயன்படுத்தி அசத்திய ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 118 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இதையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக அவர் 9வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 23 வயதில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 23 வயதுக்குள் சச்சின் 8 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதுக்கு முன் 2வது அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரவி சாஸ்திரி சாதனையையும் ஜெய்ஸ்வால் உடைத்துள்ளார்.

- Advertisement -

இந்தியா அசத்துமா:

இதற்கு முன் 23 வயதுக்குள் ரவி சாஸ்திரி 5 சதங்கள் அடித்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் 6 சதங்களை அடித்துள்ளார். அந்தப் பட்டியலில் 11 சதங்கள் சச்சின் இப்போதும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கருண் நாயர் 17 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இதையும் படிங்க: கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த இந்திய அணியில் இப்படி நடந்திருக்காது.. பும்ரா குறித்து – அஷ்வின் பேச்சு

தற்போதைய நிலவரப்படி நான்காவது நாள் தேநீர் இடைவெளியில் இந்தியா 304/6 ரன்கள் எடுத்துள்ளது. 281 ரன்களை பெற்றுள்ள இந்தியா 350 ரன்களுக்கு மேல் இலக்காக நிர்ணயிக்க முயற்சிக்க உள்ளது. களத்தில் ஜடேஜா மற்றும் ஜுரேல் இந்திய அணிக்கு கை கொடுத்து வருகிறார்கள்.

Advertisement