கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த இந்திய அணியில் இப்படி நடந்திருக்காது.. பும்ரா குறித்து – அஷ்வின் பேச்சு

Ashwin and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியானது இன்று மூன்றாம் நாளை எட்டியுள்ள வேளையில் இந்த போட்டி படு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்

பும்ரா விளையாடியிருக்க வேண்டும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

இதன் காரணமாக இந்த போட்டியின் மைதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடாது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் அவர் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த கடைசி போட்டியில் பணிச்சுமை காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் இந்திய அணி இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது நிச்சயமாக இந்த ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடியிருக்க வேண்டும் என்றும் அவருடைய பணிச்சுமை குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

கடந்த கால இந்திய டெஸ்ட் அணியாக இருந்திருந்தால் நிச்சயம் பும்ரா இந்த இறுதிப் போட்டியில் விளையாடியிருப்பார். அவரை விளையாட நிர்வாகம் வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால் இப்போது நிர்வாகம் அதை விரும்பவில்லை. பும்ராவின் பார்வையில் இது சரியான முடிவு என அவர் பார்க்கிறார்.

இதையும் படிங்க : 66 ரன்ஸ்.. இங்கிலாந்தை கடுப்பேற்றி கம்பீரையே சிரிக்க வைத்து மாஸ் காட்டிய ஆகாஷ்.. கும்ப்ளேவுக்கு பின் சாதனை

இருந்தாலும் அவர் இந்த போட்டியில் விளையாடியிருக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அனைத்து போட்டிகளிலும் விளையாடியதால் அவருக்கு காயம் ஏற்பட்டு பின்னர் அறுவைசிகிச்சை வர சென்றது.

Advertisement