செளரவ் கங்குலியை முந்திய ஜெய்ஸ்வால்.. கம்பீரின் 16 வருட சாதனையை தூளாக்கி புதிய சாதனை

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தொடங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக பந்து வீசிய இந்தியா வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26, அலெக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இம்முறை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதில் ஜெயஸ்வால் மிகவும் நிதானமாக விளையாடி 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு இந்த பதிவிடும் போது 44* ரன்கள் குவித்தார். அந்த ரன்களை சேர்த்து இந்த வருடம் ஜெய்ஸ்வால் மொத்தம் 1156* ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய இடதுகை பேட்ஸ்மேன் என்ற கௌதம் கம்பீர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 1134 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 1156* (2024)
2. கௌதம் கம்பீர்: 1134 (2008)
3. சௌரவ் கங்குலி: 1106 (2007)

- Advertisement -

இளம் புயல் ஜெய்ஸ்வால்:

கடந்த வருடம் அறிமுகமான ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல உதவினார். அதே போல சமீபத்திய நியூசிலாந்து தொடரிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது ஜெய்ஸ்வால் நன்றாகவே விளையாடினார்.

இதையும் படிங்க: 14 ஃபோர்ஸ் 10 சிக்ஸ் 151 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ் ஐயரை முந்திய திலக் வர்மா.. எந்த வீரரும் செய்யாத மாபெரும் உலக சாதனை

அந்த வரிசையில் தற்போது அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு விளையாடுகிறார். அவருடைய ஆட்டத்தால் இந்திய அணி 140 ரன்களை முன்னிலையை கடந்து அசத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு ஜெயஸ்வால் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.

Advertisement