14 ஃபோர்ஸ் 10 சிக்ஸ் 151 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ் ஐயரை முந்திய திலக் வர்மா.. எந்த வீரரும் செய்யாத மாபெரும் உலக சாதனை

Tilak Varma
- Advertisement -

இந்தியாவில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நவம்பர் 23ஆம் தேதி ராஜ்கோட் நகரில் ஹைதராபாத் மற்றும் மேகாலயா அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ராகுல் சிங் டக் அவுட்டானார்.

ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். குறிப்பாக சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த அவர் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அதே வேகத்தில் போட்டியில் மேகாலயா அணியை வெளுத்து வாங்கி அரை சதமடித்தார்.

- Advertisement -

திலக் வர்மா அபாரம்:

தொடர்ந்து பட்டாசாக பேட்டிங் செய்த அவர் சதம் அடித்து 14 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 151 (67) ரன்களை விளாசினார். அவருடன் தன்மய் அகர்வால் 55, புத்தி ராகுல் 30 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதராபாத் 248-4 ரன்கள் குவித்தது. மேகாலயா அணிக்கு அதிகபட்சமாக திப்பு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஸ்ரேயாஸ் ஐயர் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2019ஆம் ஆண்டு சிக்கிம் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் 147 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

உலக சாதனை:

அது போக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 2 போட்டியில் சதமடித்த திலக் வர்மா இந்த போட்டியையும் சேர்த்து 3 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். அந்த வகையில் அவர் ஹாட்ரிக் சதங்கள் அடித்துள்ளார். அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையையும் திலக் வர்மா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களையும் மிரளவைத்த இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா – என்ன நடந்தது?

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மேகாலயா அணியை 15.1 ஓவரில் 69க்கு சுருட்டிய ஹைதராபாத் 179 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேகாலயாவுக்கு அதிகபட்சமாக சுபாஷ் 27 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக அங்கித் ரெட்டி 4, தனய் தியாகராஜன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

Advertisement