IND vs WI : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்த்து மற்றொரு 24 வயது இந்திய வீரரும் இன்று அறிமுகமாக வாய்ப்பு – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.

Yashasvi Jaiswal

- Advertisement -

இந்த தொடரானது 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குள் வருவதனால் இந்த இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தற்போது அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதால் இன்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஏற்கனவே நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களம் இறங்குவார் என்பதை உறுதி செய்துள்ளதால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 வயதான ஜெய்ஸ்வால் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இடது கை ஆட்டக்காரர் என்பதனாலும் துவக்க வீரராக களம் இறங்குவதாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Ishan Kishan and Gill

அதனை தொடர்ந்து மேலும் ஒரு வீரராக தற்போது 24 வயது இந்திய வீரரான இஷான் கிஷன் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரிஷப் பண்ட்க்கு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு கே.எஸ் பரத்திற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும்.

- Advertisement -

ஆனால் அவர் தனக்கு கிடைத்த ஐந்து போட்டிகளின் வாய்ப்பையும் வீணடித்துள்ளார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் போலவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இடது கை வீரரான இஷான் கிஷன் பின் வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வீடியோ : அவர பாத்ததும் பேச வார்த்தையே இல்ல – அவர் கூட விளையாட கொடுத்து வெச்சுருக்கேன், ஜெய்ஸ்வால் – ருதுராஜ் பேட்டி

மேலும் ஜெயஸ்வால் துவக்க வீரராக களமிறங்குவதால், சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்றும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் விராட் கோலி, ரஹானே ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதினால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவோம் என்று ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement