ஷிகர் தவானின் 12 வருட சாதனையை தூளாக்கி – இராணி கோப்பையில் 2 மெகா சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான இராணி கோப்பையின் 2022/23 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக அந்த வருடத்தின் ரஞ்சிக் கோப்பையை வெல்லும் அணியுடன் ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய பிரதேச அணிகள் இந்த கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் 2023 ரஞ்சிக் கோப்பை வென்ற சௌராஷ்ட்ரா அணியை முதலில் எதிர்கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதைத்தொடர்ந்து வெற்றி வாகை சூடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதும் இந்த கோப்பையின் இறுதி போட்டி மார்ச் 1ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் குவாலியரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 484 ரன்கள் குவித்து மிரட்டியது. கேப்டன் மயங் அகர்வால் 2 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 371 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமாக செயல்பட்ட இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்தும் ஓயாமல் எதிரணி பவுலர்களைப் பந்தாடி 30 பவுண்டரி 3 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 213 (259) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து அசத்திய அபிமன்யு ஈஸ்வரன் 17 பவுண்டரி 2 சிக்சருடன் தனது பங்கிற்கு சதமடித்த 154 ரன்கள் குவிக்க மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் 4 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

அபார சாதனை:
அதை தொடர்ந்து களமிறங்கிய மத்தியப்பிரதேசம் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் துபே 109 ரன்கள் எடுக்க ரெஸ்ட் ஆஃப் இந்தியா சார்பில் அதிகபட்சமாக புல்கிட் நரங் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 190 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு ஒருபுறம் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் மீண்டும் அசத்திய யசஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 16 பவுண்டரி 3 சிக்சருடன் 144 (157) ரன்கள் குவித்து காப்பாற்றினார்.Yashasvi Jaiswal

அதனால் 437 என்ற பெரிய இலக்கை துரத்தி வரும் மத்திய பிரதேசம் 4வது நாள் முடிவில் 81/2 என்ற நிலையில் தடுமாற்றமாக விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஜெய்ஸ்வால் 2வது இன்னிங்ஸில் சதமடித்து தனது அணியை கிட்டத்தட்ட வெற்றி பெற வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அத்துடன் இராணி கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் இரட்டை சதமும், சதமும் அடித்த முதல் வீரர் என்ற இந்தியாவுக்காக விளையாடிய பல முன்னாள் இந்நாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களால் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

அதே போல் இராணி கோப்பை ஃபைனலில் இரட்டை சதமும், சதமும் அடித்த முதல் வீரர் என்ற மெகா சாதனையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் 213, 144 என இப்போட்டியில் மொத்தம் 357 ரன்கள் அடித்துள்ள அவர் இராணி கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சிகர் தவானின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 357* (2023)
2. ஷிகர் தவான் : 332 (2011)
3. ஹனுமா விஹாரி : 294 (2019)
4. வாசிம் ஜாபர் : 286 (2018)
5. முரளி விஜய் : 266 (2012)

- Advertisement -

அதே போல் இராணி கோப்பை ஃபைனலில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் அவரது வசமாகியுள்ளது. 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து அனைவரது கவனத்தைப் பெற்ற இவர் சமீப காலங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இதே போல் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க:IND vs AUS : 4 ஆவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் – என்ன நடக்கும் தெரியுமா?

குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 15 போட்டிகளில் 9 சதங்கள் 2 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் உட்பட 1845* ரன்களை 80.21 என்ற நல்ல சராசரியில் குவித்து வரும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement