தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான கடைசி போட்டியில் அறிமுகமாக இருக்கும் யாஷ் தயாள் – 3 முக்கிய காரணங்கள்

Yash-Dayal
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நான்காவது டி20 போட்டியானது நாளை பெற இருக்கிறது.

இந்திய அணியில் யாஷ் தயாள் அறிமுகமாக வாய்ப்பு :

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெறும் பட்சத்தில் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்று கணக்கில் கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மிக முக்கியமான மாற்றம் நடைபெற காத்திருக்கிறது. அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதற்கு மூன்று மிக முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. அந்த வகையில் அவர் அறிமுகமாவதற்கான காரணங்களை இங்கு காணலாம். 1) பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய தெரியும் வீரர் : இந்திய அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளின் போது ஸ்விங் செய்து பந்துவீசும் வீரர்கள் மிக குறைவாகவே உள்ளனர். தற்போதைய இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே பந்தினை ஸ்விங் செய்து வீசும் வீரராக இருக்கிறார். அதன் காரணமாக தற்போது யாஷ் தயாள் இந்த போட்டியின் போது அறிமுகப்படுத்தப்பட்டு அவரது பந்துவீச்சை பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

2) புதிய பந்துவீச்சாளராக அவரை பயன்படுத்தலாம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்து தொடரில் இதுவரை யாஷ் தயாள் வாய்ப்பு பெறாததால் கடைசி போட்டியின் போது அவரை ஒரு சர்ப்ரைஸ் வீரராக அணியில் கொண்டு வரும் பட்சத்தில் அவரது ஓவரை எதிர்த்து விளையாட தென்னாப்பிரிக்க வீரர்கள் கடினப்படுவார்கள் என்பதாலும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3) பென்ச் ஸ்ட்ரென்த் பரிசோதனை : இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய வீரர்கள் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் யாஷ் தயாளையும் இந்த போட்டியில் அறிமுகப்படுத்தி அவரது பந்துவீச்சை பரிசோதனை செய்தால் எதிர்காலத்தில் அது இந்த டி20 அணிக்கு பெரிய பலமாக இருக்கும்.

இதையும் படிங்க : ராபின் உத்தப்பா சொன்ன வார்த்தையை உண்மையாக்கி காட்டிய அபிஷேக் சர்மா – இவர் கண்டிப்பா சூப்பர் பிளேயர் தான்

துவக்க ஓவர்கள் மட்டுமின்றி இறுதி கட்ட ஓவர்களிலும் யாஷ் தயாள் சிறப்பாக பந்து வீசுவார் என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எவ்வாறு செயல்படுவார்? என்பதையும் பரிசோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வாய்ப்பினை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement