கிரிக்கெட்டரா இருந்து கார்பென்டராக மாறிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் – யார் தெரியுமா ?

Doherty
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் சில வீரர்கள் பல ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாடி கோடீஸ்வரராக திகழ்ந்தாலும், ஒரு சில வீரர்கள் சில ஆண்டுகளே வாய்ப்பு பெற்று ஓய்வுக்குப் பிறகு மிகவும் கஷ்டப்படும் சூழலுக்கும் செல்கின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக 2015ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையிலான உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த வீரர் ஒருவர் கார்பென்டராக வேலை செய்வது பார்ப்பவர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

doherty 1

- Advertisement -

அதன்படி 38 வயதான சேவியர் டோஹெர்டி என்கிற சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய அணிக்காக 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்னர் 5 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடிய அவர் 60 ஒருநாள் போட்டிகள் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காத இவர் ஓய்வு அறிவித்து வெளியேறினார்.

தற்போது 38 வயதை எட்டியுள்ள இவர் அடுத்ததாக தான் என்ன செய்வது என்று யோசித்து கார்பென்டராக மாறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 12 மாதங்கள் எனக்கு எந்தெந்த வாய்ப்பு வந்ததோ அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி வேலை செய்து வந்தேன்.

இந்நிலையில் தற்போது நான் கார்பெண்டர் அப்பிரேண்டிஸ்ஷிப் செய்து வருகிறேன். எனது கையால் தற்போது ஒரு வீட்டை வடிவமைத்து வருகிறேன். இது கிரிக்கெட்டை விட வித்தியாசமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

doherty 2

மேலும் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு லேண்ட்ஸ்கேப்பிங், ஆபிஸ் ஒர்க், கிரிக்கெட் வொர்க் என பலவற்றையும் என்னுடைய தேவைகளுக்காக செய்தேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்தார். அவரின் இந்த பரிதாப நிலையை கண்ட ரசிகர்கள் இந்தப் பதிவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement