இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்த தொடரில் இந்தியா 4 வெற்றிகளை பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அப்படி சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்ததால் இம்முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இருப்பினும் கடந்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த உத்வேகத்துடன் இம்முறையும் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி போராட தயாராகி வருகிறது.
ஆலோசகராக சச்சின்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் இடையே 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியில் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனைகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பிசிசிஐயை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “2025 பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கு தொடருக்கு தயாராகும் பயணத்தில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் ஆலோசகராக பயன்படுத்திக் கொண்டால் பயனடைவார்கள் என்று நான் நினைக்கிறேன். முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் இடையே போதுமான நேரம் இருக்கிறது”
சிறந்த முடிவு:
“அது போன்ற ஆலோசகரை நியமிப்பது இந்த காலங்களில் சாதாரணமாகி விட்டது. இந்த ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறதா?” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல தற்சமயத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் பேட்ஸ்மேன்கள் கூட சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உதவுவதற்காக சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனைகளை பயன்படுத்தி கொள்வது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: ராபின் உத்தப்பா சொன்ன வார்த்தையை உண்மையாக்கி காட்டிய அபிஷேக் சர்மா – இவர் கண்டிப்பா சூப்பர் பிளேயர் தான்
வரலாற்றில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் 20 போட்டிகளில் 1809 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக 2003ஆம் ஆண்டு சுமாரான ஃபார்மில் தவித்த போது கவர் ட்ரைவ் அடிக்காமலேயே சிட்னி மைதானத்தில் அவர் 241* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே அவரை ஸ்பெஷல் கோரிக்கையுடன் பிசிசிஐ பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகலாம்.



