சச்சின் டெண்டுல்கரை சீக்கிரம் இந்திய அணிக்குள் கொண்டு வாங்க – முன்னாள் இந்திய வீரர் ராமன் கருத்து

Raman-and-Sachin
- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி முற்றிலுமாக இழந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதிலும் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

இந்திய அணிக்குள் சச்சின் டெண்டுல்கரை கொண்டுவாங்க :

இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) அல்லது நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு எவ்வித சிக்கலும் இன்றி செல்லும் இல்லையென்றால் மற்ற அணிகளின் வெற்றியை எதிர்பார்த்தே இந்திய அணி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

- Advertisement -

நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கும் இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா பயணித்திட்ட வேளையில் ரோகித் சர்மா மட்டும் இன்னும் அங்கு சென்றடையாமல் இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராமன் இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தடுமாறி வருவதால் இந்திய அணியின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக தற்போதைக்கு ஆஸ்திரேலியா பயணத்திற்கும் இந்திய அணியுடன் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

அவர் போன்ற ஜாம்பவான் ஒருவர் அணியில் இருக்கும் போது அது அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கும், ஜூனியர் வீரர்களுக்கும் சரியான உபயோகமாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒருவர் பேட்டிங் ஆலோசகராக இருந்தால் அணியின் வீரர்கள் நம்பிக்கை பெற்று பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்தை காண்பார்கள் என்பதனால் உடனடியாக அவரை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள் என ராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஆஸி 90ஸ் லயே பண்ணியும் வேலையாகல.. இங்கிலாந்து மாதிரி கண்ணாமூச்சி காட்டாதீங்க.. இயன் ஹீலி

இருப்பினும் இது குறித்த முடிவை பிசிசிஐ தான் எடுக்கும் என்பதனால் பிசிசிஐ விரைந்து இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த கருத்தின் படி பல்வேறு ரசிகர்கள் அவரது இந்த கருத்து சரியான ஒன்றுதான் என்றும் சச்சின் டெண்டுல்கரை அணியின் பேட்டிங் ஆலோசகராக விரைவில் கொண்டு வாருங்கள் என்றும் அவரது இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement