ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. கடந்த இரண்டு தொடர்களை ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. இருப்பினும் சமீபத்தில் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
எனவே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இம்முறை கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது. அதற்காக இந்திய அணியினர் தங்களுடைய பயிற்சிகளை மூடிய வலைக்குள் செய்து வருகிறார்கள். குறிப்பாக தங்களுடைய திட்டங்களையும் முயற்சி நுணுக்கங்களையும் ஆஸ்திரேலிய அணியினர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக கருப்புத் துணியால் மூடப்பட்ட வலையில் இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதெல்லாம் வேலையாகாது:
ஆனால் அது இந்திய அணிக்கு எந்த பயனையும் கொடுக்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். அது போன்ற முயற்சிகளை ஆஸ்திரேலியா 1990களிலேயே செய்தும் பயனளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா செய்ததை இப்போது ஆஸ்திரேலியாவில் இந்தியா செய்கிறது”
“அதாவது ஊடகங்களுக்கு முன்னாள் அவர்கள் தங்களை காட்ட விரும்பவில்லை. ஆனால் ஊடக வாய்ப்புகளுக்கு உங்களை திறந்து வைத்து அவற்றை செய்து ஆஸ்திரேலிய பொது மக்களையும் இங்கு இருக்கும் பல இந்தியர்களையும் சந்தித்தால் அது மகிழ்ச்சி நிறைந்த சுற்றுப்பயணமாக அமையும். இந்தியா தங்களை தாங்களே பூட்டி கொள்வதற்கு கூடுதல் காரணங்கள் உள்ளன”
கண்ணாமூச்சி வேண்டாம்:
“அவர்கள் நாளுக்கு நாள் சமாளிக்க வேண்டிய ரசிகர்களின் கிளர்ச்சி கூட்டத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. எனவே இப்படி பயிற்சி செய்வது பாதுகாப்பாக இருக்கலாம். மேலும் சில விஷயங்களை அவர்கள் மற்றவர்கள் பார்க்காத இடத்தில் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அது வேலை செய்வதில்லை. இப்படி நீங்கள் செய்யும் போது உங்களுடைய அணி ரிலாக்ஸாக வைத்திருக்காது”
இதையும் படிங்க: 2008இல் ஒரு மேட்ச் தடை பெற்றதை மறந்துட்டீங்களே.. பாண்டிங்கை சீண்டிய கம்பீருக்கு ப்ராட் ஹாடின் எச்சரிக்கை
“ஏனெனில் ஊடகங்கள் உங்களை துடைத்தெடுக்க ஆரம்பிப்பார்கள். அதனால் உங்களுடைய அணி ரிலாக்ஸாக இருக்க முடியாது. ஒருமுறை இங்கிலாந்து இவ்வாறு செய்தது வேலையாகவில்லை. பின்னர் அவர்கள் திறந்த வெளியில் பயிற்சிகளை செய்தார்கள். அது அவர்களுடைய செயல்பாடுகளிலும் சிறப்பாக வெளிப்பட்டது” என்று கூறினார். இதை அடுத்து முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.