இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீர் தான் அந்த வீரருக்கு பதில் சொல்லனும் : முன்னாள் வீரர் கருத்து
ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சாய் சுதர்சன் இந்திய அணிக்காக அறிமுகமானதை தவிர்த்து வேறு எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அர்ஷ்தீப் சிங் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவருக்கும் இந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியிலாவது அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று இந்த தொடரின் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை அவர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்காத வேளையில் இனிவரும் எஞ்சிய போட்டிகளும் முக்கிய போட்டிகளாக மாறியுள்ள வேளையில் அவர்களுக்கு நிச்சயம் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அதிலும் குறிப்பாக 29 வயதான பெங்கால் அணியைச் சேர்ந்த வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் இந்திய ஏ அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருக்கும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்தாலும் அறிமுகமாகும் வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இப்படி டெஸ்ட் போட்டிகளுக்காக மட்டுமே விளையாடி வரும் ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பது தவறு என்றும் பல்வேறு பிரபலங்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான டபள்யூ.வி ராமன் கூறுகையில் : அபிமன்யு ஈஸ்வரன் போன்ற ஒரு வீரருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியாக வேண்டும். ஏனெனில் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
ஆனால் அவரை இப்படி அலைக்கழிப்பது தவறு. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் அணியில் இருந்தும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரின் போதும் அவரை அழைத்துச் சென்றும் அவருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறது. தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கும் அவருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனியிடம் இருந்து சுப்மன் கில் அந்த அட்வைஸ்ஸை கேட்டு கத்துக்கனும் – கேரி கிறிஸ்டன் கருத்து
எனவே அணியில் அவருடைய ரோல் என்ன? என்பதை கம்பீர்தான் தெளிவாக கூற வேண்டும். அதோடு அவருக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும்? என்பதற்கும் கம்பீர்தான் சரியான பதிலை சொல்ல வேண்டும் என்றும் ராமன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



