இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு அடுத்து பும்ரா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல் ராகுல் ஆகியோரில் ஒருவர் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு புதிய டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அப்படி புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையில் தற்போது இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
தோனியிடம் இருந்து கில் அறிவுரைகளை பெறவேண்டும் :கேரி கிறிஸ்டன்
அங்கு நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்கிற நிலையுள்ளது.
இளம் வீரரான சுப்மன் கில் இப்படி தனது முதல் தொடரிலேயே வெளிநாட்டு மண்ணில் தடுமாறி வருவது சற்று ஏமாற்றத்தை அளித்தாலும் இனிவரும் காலங்களில் அவர் அதையெல்லாம் கற்றுக் கொள்வார் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சுப்மன் கில் தற்போது தான் கேப்டனாக தனது ஆரம்பகட்டத்தில் இருக்கிறார். அவரிடம் சிறப்பான கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. ஏனெனில் அவர் போட்டி குறித்து நன்கு சிந்திக்க கூடியவராக இருக்கிறார். அதுமட்டும் இன்றி அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதனால் நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களில் அவர் கேப்டன்சி குறித்தும் இன்னும் படிப்படியாக கற்றுக்கொள்வார்.
ஆனாலும் என்னைப் பொறுத்தவரை ஒரு அணியின் கேப்டன் என்பவர் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்.
இதையும் படிங்க : ப்ளீஸ் இப்போவது அவருக்கு வாய்ப்பு குடுங்க.. குல்தீப் யாதவுக்காக வேண்டுகோள் வைத்த – சிறுவயது பயிற்சியாளர்
எனவே அவரிடம் இருந்து வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும்? கேப்டன்சியை எவ்வாறெல்லாம் முன்னேற்ற முடியும்? என்பது போன்ற அறிவுரைகளை சுப்மன் கில் கேட்டுப் பெறவேண்டும். தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. எனவே அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக் கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன்சியை நிச்சயம் மேம்படுத்தும் என கேரி கிறிஸ்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.



