ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். ஏற்கனவே 2023இல் அறிமுகமாகி சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டிருந்த அவரை திடீரென தேர்வுக்குழு ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்தது. அதற்காக டி20 அணியின் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய சுப்மன் கில் கடைசியாக களமிறங்கி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த அவருக்கு பதிலாக விளையாடிய சஞ்சு சாம்சன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.
போஸ்டிங் கொடுத்ததே தப்பு:
அதனால் கில்லை விட தம்மால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்த சாம்சன் ஏற்கனவே ஓப்பனிங்கில் 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதைக் கருத்தில் கொண்ட தேர்வுக்குழு கடைசி நேரத்தில் கில்லை கழற்றி விட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் இந்தத் தேர்வு 1983 உலகக் கோப்பையில் கிளாஸ் நிறைந்த சுனில் கவாஸ்கரை கழற்றி விட்டு அதிரடிக்காக கிரிஸ் ஸ்ரீகாந்தை தேர்ந்தெடுத்தது போல் இருப்பதாக முன்னாள் வீரர் டபிள்யூவி இராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுப்மன் கில்லின் இயற்கையான ஆட்டத்தை அறியாமல் அவரை டி20 அணியின் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்ததே தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி ராமன் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் குறிப்பிடத்தக்க தவறு செய்ததற்காக நீக்கப்படவில்லை. அவரைச் சுற்றி அதிக அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளார்”
ராமன் கருத்து:
“அதுவே நவீன டி20 கிரிக்கெட்டில் தேவைப்படும் தரமாகும். இது கிட்டத்தட்ட டி20 கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கருக்கு பதிலாக ஸ்ரீகாந்தை தேர்ந்தெடுப்பது போல் இருக்கிறது. அதனாலேயே நிறைய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தயாராக இருக்கும் போது, சுப்மன் கில் ஏன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்? என்று நான் ஆச்சரியப்பட்டேன்”
இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் உதவி கேட்டு இந்தியா ஃபோன் பண்றாங்க.. அந்தளவுக்கு அதுல முன்னேறி வரோம்.. ஆகிப் ஜாவேத்
“ரோஹித் சர்மா எப்போதும் நேராக பேட்டை வைத்து விளையாடுவார். ஆனால் அது அவரை அதிரடியாக விளையாட விடாமல் தடுக்கிறதா? கிடையாது. சில நேரங்களில் டி20 கிரிக்கெட்டில் நேராக பேட்டை வைத்து விளையாடுவது உங்களுக்கு அதிகம் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். அவை அனைத்தும் நீங்கள் எப்படிப்பட்ட வீரர் என்பதைப் பொறுத்தது. அந்த வகையில் சுப்மன் கில்லை விட அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் அவரைச் சுற்றி இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.



