ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அதனால் சோக்கர் என்ற பட்டத்தை உடைத்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.
அந்த அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐசிசி ஐசிசி வழங்கியுள்ளது. அதன் படி இந்திய ரூபாயில் தென்னாபிரிக்க அணி சுமார் 30.80 கோடி ரூபாய்களை பரிசாக அள்ளிச் சென்றுள்ளது. டி20 கிரிக்கெட்டின் வருகையால் தற்போது களத்தில் விளையாடும் வீரர்கள் முதல் பார்க்கும் ரசிகர்கள் வரை பெரும்பாலானவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இந்தியாவுக்கு 12.32 கோடிகள்:
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவை விட தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு இரு மடங்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணிக்கு 2.16 அமெரிக்க டாலர்கள் அதாவது 18.50 கோடி ரூபாய்கள் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்த இந்திய அணிக்கு 1.44 மில்லியன் டாலர்கள் அதாவது 12.32 கோடிகள் ஆறுதல் மற்றும் ஊக்கத்தொகையாக கிடைத்துள்ளது. 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா இம்முறை முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்றதால் இந்தியா ஹாட்ரிக் ஃபைனல் வாய்ப்பை நழுவ விட்டது
பரிசுத்தொகை விவரம்:
இந்தியாவுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணி 10.26 கோடிகள் ஆறுதல் பரிசாக பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக 5வது இடத்தைப் படித்த இங்கிலாந்து அணி 8.20 கோடிகளை பரிசாக பெற்றுள்ளது. 6வது இடத்தைப் பிடித்த இலங்கை அணி 7.18 கோடிகளை ஆறுதல் பரிசாகப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: எனக்கா மெயின் டீம்ல சேன்ஸ் இல்ல.. இந்திய ஏ அணிக்காக விளையாடி மெயின் டீமை பொளந்த – சர்பராஸ் கான்
7வது இடத்தைப் பிடித்த வங்கதேச அணி 6.15 கோடிகள் பரிசாகப் பெற்றது. 8வது இடத்தைப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5.13 கோடிகளை ஆறுதல் பரிசாகப் பெற்றது. வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக அவமானத் தோல்வியை சந்தித்து கடைசி இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் 4.10 கோடிகளை ஆறுதல் பரிசாகப் பெற்றது.



