எனக்கா மெயின் டீம்ல சேன்ஸ் இல்ல.. இந்திய ஏ அணிக்காக விளையாடி மெயின் டீமை பொளந்த – சர்பராஸ் கான்

Sarfaraz Khan
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் இம்முறை இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே அங்கு நடைபெற உள்ள கடினமான இந்த தொடரில் விளையாடுகிறது.

இந்தியா ஏ அணிக்காக சதம் விளாசி அசத்திய சர்பராஸ் கான் :

இதன் காரணமாக சவால் மிகுந்த தொடராக பார்க்கப்படும் இந்த இங்கிலாந்து தொடருக்காக தயாராகும் வகையில் ஏற்கனவே இந்திய ஏ அணியானது இங்கிலாந்து சென்றடைந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அதேபோன்று முதன்மை இந்திய அணியும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தை விளையாடியது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தற்போது இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த பயிற்சி போட்டியின் போது இந்திய ஏ அணிக்காக விளையாடிய இளம் வீரரான சர்ஃபராஸ் கான் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதத்துடன் 371 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார் இருந்தாலும் அவருக்கு இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய முதன்மை அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தனக்கு முதன்மை அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது முதன்மை அணிக்கு எதிராகவே இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசி தேர்வுக்குழுவினரை மிரள வைத்துள்ளார். ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் உள்ளூர் போட்டிகளில் மலை போல் ரன் குவித்து வந்தாலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் இந்திய அணியில் கிடைக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா வெளியேறிய பிறகு இந்திய அணியின் டெஸ்ட் துவக்க வீரர் யார்? விவரம் இதோ?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement