டெஸ்ட் மேட்ச் பிளேயரா இவரு ? இந்த சாத்து சாத்துறாரு – வாயை பிளக்க வைத்த அதிரடி ஆட்டம் – விவரம் இதோ

Saha
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலான போட்டிகளில் வார்னர் உடன் பேர்ஸ்டோ துவக்க வீரராக சன் ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்கி வந்தார். ஆனால் கடந்த சில போட்டிகளாக பேர்ஸ்டோவின் ஆட்டம் சிறப்பாக இல்லாததன் காரணமாக அவர் நீக்கப்பட்டு நேற்று அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமின்றி துவக்க வீரராக விருத்திமான் சஹா வார்னருடன் களமிறங்கினார்.

Saha 1

களமிறங்கியது முதல் வார்னருடன் சேர்ந்து அதிரடியில் கலக்கிய சஹா 45 பந்துகளில் 87 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக தேர்வாகியுள்ள சஹா இப்படி ஒரு ஆட்டத்தை டி20 போட்டியில் விளையாடி உள்ளது ரசிகர்களிடையே பெறும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement