நான் கோவத்துடன் எதிர்த்து பந்துவீசிய பேட்ஸ்மேன் இந்த ஒருவர் தான் – சோயிப் அக்தர் வெளிப்படை

Akhtar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தனது அதிரடியான வேகப்பந்து வீச்சால் உலகில் எத்தனையோ டாப் பேட்ஸ்மேன்களை திணறடித்த பெருமைக்குரியவர். குறிப்பாக மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கு அருகிலிருந்து தனது ஓட்டத்தை துவங்கும் அவர் மிக வேகமாக ஓடி வந்து அதிவேகமான பந்துகளை வீசும் அவரை “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என அனைத்து ரசிகர்களும் போற்றி வருகிறார்கள். சொல்லப்போனால் நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமான பந்தை வீசிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியியில் 161.3 கீ.மீ வேகத்தில் அவர் வீசிய பந்து தான் உலகிலேயே அதிவேகமாக வீசப்பட்ட பந்தாகும்.

ShoaibAkhtar

- Advertisement -

கோபக்கார சோயப் அக்தர்:
சர்வதேச போட்டிகளில் அதிக வேகத்தில் வீசப்பட்ட டாப் 6 பந்துகளுக்கு சோயப் அக்தர் சொந்தக்காரராக உள்ளார். அவ்வளவு திறமை வாய்ந்த இவருக்கு எப்போதும் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை தனது அபார வேகப்பந்து வீச்சால் அச்சுறுத்துவது மிகவும் பிடிக்கும். குறிப்பாக இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் ஆகியோரை கண்டால் வேண்டுமென்றே மிகவும் வேகமான பந்துகளை வீசி அவர்களை அச்சுறுத்தவதற்கு முயல்வார்.

ஆனால் அவரின் வேகத்துக்கு அஞ்சாத சச்சின் டெண்டுல்கர் பலமுறை அவரின் பந்துகளில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மொத்தத்தில் தனது பந்துகளை போலவே கோபமும், ஆக்ரோஷமும் நிறைந்த ஒருவராக சோயப் அக்தர் அறியப்படுகிறார்.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar
Shoaib-Akhtar-Sachin-Tendulkar

ரிக்கி பாண்டிங் உடன் மோதல்:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உடனான ஒரு பரபரப்பான தருணம் பற்றி சோயப் அக்தர் மனம் திறந்துள்ளார். இதுபற்றி பிரபல சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த டெஸ்ட் போட்டியின்போது யாரையேனும் ஒருவரை காயப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாகவே நான் அதிவேகமான பந்துகளை வீசினேன்.

- Advertisement -

குறிப்பாக எனது வேகத்திற்கு ரிக்கி பாண்டிங் பதில் கொடுக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக வேண்டுமென்றே அவருக்கு எதிராக அதிவேகமான பவுன்சர்களை வீசினேன். ஏனெனில் அதற்கு முன் அவரை எனது வேகப்பந்து வீச்சால் தோற்கடித்ததில்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில் அந்த போட்டியில் அந்த பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்’காக இல்லாமல் போயிருந்தால் அவரின் கழுத்தை எனது வேகமான பந்தால் சீவியிருப்பேன்” என கூறினார்.

Shoaib Akhtar Ricky Ponting

அவர் கூறும் அந்த போட்டியானது கடந்த 1999-ஆம் ஆண்டு பெர்த் நகரில் நடைபெற்றதாகும். அந்தப் போட்டிக்கு முன்பாக நடந்த 2 போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்து 2 – 0 என தொடரில் பின் தங்கியிருந்தது. குறிப்பாக ஹோபார்ட் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இணைந்து பாகிஸ்தான் நிர்ணயித்த 369 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். எனவே பெர்த்தில் நடந்த 3-வது போட்டியில் எப்படியாவது பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்ற நோக்கத்தில் வெறித்தனமாக பந்து வீசியதாக தெரிவித்துள்ள சோயப் அக்தர் அந்த தருணத்தில் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிக்கி பாண்டிங்க்கு வேண்டுமென்றே அதிவேகமான பவுன்சர் பந்துகளை வீசியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியர்களுக்கு பிடித்த அக்தர்:
“ஆஸ்திரேலிய வீரர்கள் எனது ஆக்ரோஷத்தை விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் என்னை ஒரு ஆக்ரோஷம் நிறைந்த ஆஸ்திரேலியரின் குணத்தை கொண்ட பாகிஸ்தானியராக கருதினர். நானும் அவர்களுக்கு பதிலடி கொடுத்தேன். 2005-ஆம் ஆண்டு ஜஸ்டின் லாங்கருடன் சண்டையில் ஈடுபட்டேன். மேத்தியூ ஹைடன் உடன் சண்டை செய்தேன். ஆனால் அவை அனைத்தும் போட்டி அடிப்படையிலான சண்டையாகும். ஏனெனில் அவர்களுக்கு உங்களை விட நான் சிறந்தவன் என்பதை காட்ட விரும்பினேன்” என இது பற்றி சோயப் அக்தர் மேலும் தெரிவித்தார்.

akhtar 1

பொதுவாக முரட்டுத்தனமாக நடந்து கொள்வதில் ஆஸ்திரேலிய வீரர்கள் கை தேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட அவர்களைப் போல தாமும் நடந்து கொண்டதால் தம்மை அவர்களுக்கு மிகவும் பிடித்தது என சோயப் அக்தர் தெரிவித்தார். மேலும் அந்த காலங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்களின் குணம் இப்போது காணாமல் போய்விட்டது என கூறிய சோயப் அக்தர் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் ரிக்கி பாண்டிங் மீது தமக்கு தனி மரியாதை உள்ளதாக கூறியுள்ள அவர் பிரட்லி ஒரு மிகச் சிறந்த நண்பர் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதே சமயம் ஆஸ்திரேலியர்கள் அபாரமானவர்கள் என பாராட்டியுள்ள சோயப் அக்தர் அந்த நாடு பார்த்தவுடன் பிடிக்கக்கூடிய ஒரு அழகிய நாடு என பாராட்டினார். மேலும் பிரிஸ்பேனில் உள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஜெப் தாம்சனின் வீடு தமக்கு 2-வது வீடு போன்றது என அவர் குறிப்பிட்டார். மேலும் அந்தக் காலங்களில் நிறைய பவுன்சர் பந்துகள் வீச அனுமதிக்கப்பட்டதாகவும் இப்போது அது குறைக்கப்பட்டுள்ளதாக சோயப் அக்தர் தனது வேதனையும் வெளிப்படுத்தினார்.

Advertisement