உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?- இத்தனை கோடிகளா ?

- Advertisement -

உலக கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

eng vs nz

- Advertisement -

தற்போது நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த உலக கோப்பை இறுதி போட்டியில் வெல்லும் அணியில் பரிசுத்தொகை ரூபாயை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதற்கடுத்து இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 13 கோடியே 71 லட்ச ரூபாய் அளிக்கப்படும்.

worldcup 1

மேலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தவர்களுக்கு தலா 5.4 கோடி ரூபாய் பரிசுத்தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு 64 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement