Worldcup : பிரமாண்டமாக துவங்கிய 12 ஆவது உலககோப்பை தொடர் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

worldcup
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup 1

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இதற்கு முன்னதாக நடைபெற்ற உலககோப்பை அறிமுக விழாவில் 10 அணி கேப்டன்களும் கலந்து கொண்டனர். இந்த விழா பக்கிங்ஹாம் அரண்மனையின் முன்பு உள்ள மால் சாலையில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களையும் ரசிகர்களுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிளிண்டாப் அறிமுகப்படுத்திவைத்தார்.

worldcup

மேலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் சுவான் ஆகியோர் உலககோப்பையினை அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement