Worldcup : இறுதி போட்டியிலும் மழை வந்தால் கோப்பை யாருக்கு தெரியுமா ?

உலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை

worldcup

உலகக்கோப்பை போட்டிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் நடக்காமல் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

worldcup 1

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியில் மழை வந்தால் ஐசிசி முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம். இந்த பதிவின் மூலம் அரை இறுதிப்போட்டியிலும் மற்றும் இறுதிப் போட்டியிலும் மழை பெய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி காணலாம் வாருங்கள்.

அதன்படி அரை இறுதிப் போட்டியின் போது மழை பெய்தால் “ரிசர்வ் டே” என்று சொல்லப்படும் மாற்று தினத்தில் போட்டியை நடத்த ஐ.சி.சி அனுமதி அளிக்கும். அவ்வாறு மாற்றி வைத்தும் அன்று மழை பெய்தால் புள்ளிப் பட்டியலில் யார் கால் இறுதி சுற்று வரை முதலில் இருந்தாரோ அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

rain

இறுதி போட்டியில் மழை பெய்தால் மீண்டும் நடத்த ரிசர்வ் டே அளிக்கப்படும். அப்படி ரிசர்வ் தினத்திலும் இறுதி போட்டியின்போது மழை பெய்தால் உலககோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அது போன்ற நிகழ்வு இதுவரை நடந்ததே இல்லை. ஆனால் இந்த முறை நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.