வேலியில் உழைச்சுருக்கேன்.. அவங்களுக்கு எதிராக புதிய பதிலடி ஆட்டத்தை பார்ப்பீங்க.. சுப்மன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கைக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் ஒருபுறம் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

ஆனால் எதிர்ப்புறம் அதே பவர் பிளேவில் அதே பவுலர்களுக்கு எதிராக சுமாராக விளையாடிய கில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அந்த நிலையில் அடுத்ததாக நாளை துவங்கும் 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

வேலியில் வேலை:

இந்நிலையில் இலங்கையிலிருந்து வந்த பின் ஸ்பின்னர்களை தடுத்து நிறுத்தக்கூடிய வேலியாக கருதப்படும் டிபன்ஸ் பேட்டிங் டெக்னிக்கில் கடினமாக உழைத்துள்ளதாக சுப்மன் கில் கூறியுள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களுக்கு எதிராக தம்முடைய புதிய முன்னேறிய ஆட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னுடைய டிஃபென்ஸில் கொஞ்சம் அதிகமாக வேலை செய்துள்ளேன். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடும் போது நீங்கள் பந்துகளை அதிகமாக தடுக்க வேண்டும். அதன் பின்பே ரன்களை அடிக்கக்கூடிய ஷாட்டுகளை விளையாட வேண்டும். தற்போது நிறைய டி20 போட்டிகள் விளையாடப்படும் நிலையில் பிட்ச்கள் பேட்டிங்க்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன”

- Advertisement -

முன்னேற்றம் இருக்கும்:

“அது உங்களுடைய தடுப்பாட்டத்தை கொஞ்சம் பறித்துள்ளது என்று நினைக்கிறேன். எனவே அதில் முன்னேறுவதைப் பற்றி தான் கடந்த இங்கிலாந்து தொடரிலும் நான் கவனம் செலுத்தினேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய செயல்பாடுகள் இதுவரை எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை. ஆனால் நாங்கள் ஒரு சீசனில் 10 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகிறோம். இருப்பினும் இம்முறை அந்த 10 போட்டிகளை திரும்பிப் பார்க்கும் போது என்னுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகி இருக்கும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: டிராவிட்டை வெச்சு இந்தியா இதைத் தான் செஞ்சாங்க.. இங்கிலாந்தின் முடிவுக்கு மைக்கேல் ஆதர்டன் வரவேற்பு

“நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள் இல்லை என்பதை தாண்டி ஒவ்வொரு போட்டியிலும் உங்களுக்கு நீங்களே நிறைய கற்றுக் கொள்வீர்கள். கேப்டனாக இருப்பதால் வீரர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். கேப்டன் வீரர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவர்களின் பலம் பலவீனங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் கேப்டன் அல்லது துணை கேப்டனாக இருக்கும் போது என்னிடம் உள்ள சிறிய மாற்றமாகும்” என்று கூறினார்.

Advertisement