- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை 2024 : சாதிக்குமா இந்திய சிங்கப்பெண்கள் படை.. அட்டவணை, எந்த சேனலில் பார்க்கலாம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது. அதில் ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா சென்னை மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரையும் 1 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.

இதைத் தொடர்ந்து மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இலங்கையில் வரும் ஜூலை 19ஆம் தேதி துவங்கும் அந்த டி20 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, நேபாள், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த 8 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்திய அணி:
அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமீரகம், நேபாள் அணிகளும் குரூப் பி பிரிவில் தொடரை நடத்தும் இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வங்கதேச அணிகளும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும்.

இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா இம்முறையும் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் விளையாட உள்ளது. சொல்லப்போனால் வரலாற்றில் இதுவரை 8 மகளிர் ஆசிய கோப்பை நடைபெற்றுள்ளது. அந்த 8 தொடர்களில் 7 முறை கோப்பையை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான ஆசிய அணியாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

எனவே இம்முறை 8வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணியில் நம்பிக்கை நாயகி ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அவருடன் ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா, பூஜா வஸ்திரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ரிச்சா கோஸ் உள்ளிட்ட தரமான வீராங்கனைகள் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளனர்.

இதையும் படிங்க: உம்ரான் மாலிக்கை இதனால தான் கழற்றி விட்டோம்.. கம்பேக் கொடுக்க அதை செஞ்சாகனும்.. பராஸ் மாம்ப்ரே அட்வைஸ்

இத்தொடரில் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் முறையே பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நேபாளை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டிகள் முறையே ஜூலை 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதில் ஐக்கிய அரபு அணிக்கு எதிரான போட்டி மட்டும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. எஞ்சிய 2 போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இந்தத் தொடரை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரலையில் பார்க்கலாம்.

- Advertisement -