21 ஆவது நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க வீரர் இவர்தான். ஆனால் அது கோலி, ரோஹித் இல்லை – விஸ்டன் தேர்வு

Jadeja-3
- Advertisement -

பிரபல பத்திரிக்கை நிறுவனமான விஸ்டன் ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு விளையாட்டுத் துறையை சார்ந்த வீரர்களையும் உன்னிப்பாக கவனித்து அவர்களில் யார் சிறந்த வீரர் என்பது குறித்த அறிவிப்பினை ஆண்டுதோறும் வெளியிடும். அந்த வகையில் தற்போது உலக அளவில் கிரிக்கெட்டில் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்பு மிக்க வீரரை ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.

indvsaus

- Advertisement -

மோஸ்ட் வேல்யூஅபுல் பிளேயர் என்பதன் பிரிவில் 31 வயதான இந்திய வீரர் ஜடேஜா உலகளவில் மதிப்புமிக்க வீரர்களில் டெஸ்ட் வீரர்கள் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார், உலக அளவில் இந்த பிரிவில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளிதரன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜா கூறும் போது : இந்தியாவுக்காக ஆடுவது என்பது எனது கனவு அதோடு மதிப்பு மிக்க வீரராக இருபத்தோராம் நூற்றாண்டில் நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆசீர்வதிக்கப்பட்ட தருணம் என்று கூறியுள்ளார். மேலும் இதனை தெரிவிக்கும்போது என் ரசிகர்கள், அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரது அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

jadeja 2

2012 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1869 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 14 அரை சதங்கள் அடங்கும. மேலும் பந்துவீச்சில் 213 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தொடர்பாக புள்ளிவிவர நிபுணர் ஒருவர் கூறுகையில் :

- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் ஜடேஜா வந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில் டெஸ்ட் அணியில் அவர் இடம் நிரந்தரமானது அல்ல. முதன்மை பந்துவீச்சாளராகவே அவர் தேர்வு செய்யப்படுகிறார். பேட்டிங்கில் ஆறாம் நிலை வீரராக களம் இறங்குகிறார். போட்டியில் தன்னை சகல விடயங்களிலும் ஈடுபடுத்திக்கொண்டு பங்களிப்பும் செய்கிறார் என்றார்.

ரன் குவிப்பு, விக்கெட் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு அவர் செய்யப்படவில்லை. போட்டியில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியம் பேட்டிங் பவுலிங் என்ற சராசரியையும் சேர்த்து அவர் 150 விக்கெட்டுகள், ஆயிரம் ரன்கள் எடுத்து அவர்களில் இரண்டாவது சராசரி வைத்திருந்ததால் இது போன்ற மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக வந்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement