நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக தோனி மாறினால். அவருக்காக நாங்கள் இதை செய்ய தயார் – வில்லியம்சன் அதிரடி

Williamson
- Advertisement -

நேற்று முன்தினம் முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ferguson

- Advertisement -

இந்த போட்டியின் வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இந்த போட்டியில் அனைத்து வகையிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது தோனி ரன்அவுட் தான். இது போன்ற தருணங்களில் தோனி ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்து அதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தோனி களத்தில் இருக்கும் போது பதற்றம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் குப்தில் அடித்த டைரக்ட் ஹிட் தான் ஆட்டத்தை மாற்றியது. ஆடுகளம் கடினமாக இருப்பினும் நிலைத்து விளையாடுவதால் தோனியின் விக்கெட்டை வாழ்த்துவதில் மட்டுமே முக்கியத்துவம் அளித்தோம். அவரின் விக்கெட்டை வீழ்த்திய பின் தான் எங்களுக்கு வெற்றிகிடைத்ததாக நினைத்தோம்.

Dhoni-2

அப்போது நிருபர்கள் வில்லியம்சன்-யிடம் நியூசிலாந்து அணிக்கு தோனியை தேர்வு செய்வீர்களா ?என்று ஒரு கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த வில்லியம்சன் சிரித்துக்கொண்டே நியூசிலாந்து அணிக்கு சட்டரீதியாக தோனியால் இப்போது விளையாட முடியாது. அதற்கு சில சிக்கல்கள் உள்ளன. ஒருவேளை தோனி இந்தியாவின் குடியுரிமை விட்டுவிட்டு நியூசிலாந்தின் குடிமகனாக மாற தயாராக இருந்தால் நாங்கள் தோனியை நிச்சயம் அணியில் சேர்த்து விளையாடுவோம் என்று வில்லியம்சன் கூறினார்

Advertisement