எங்களது வீரர்கள் மீது எந்த குறையோ, தவறோ இல்லை. இந்த ஒரு பந்தினால் உலககோப்பையே இழந்தோம் – வில்லியம்சன் வருத்தம்

Williamson
- Advertisement -

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

eng vs nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

stokes

போட்டி முடிந்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : போட்டி கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது என்று நினைக்கிறேன். இந்த பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது. நாங்கள்300 ரன்கள் அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம் ஆனால் எங்களால் அடிக்க முடியவில்லை.

Stokes 1

இன்னும் 10 முதல் 20 ரன்கள் கூடியதாக அடித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் எங்கள் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை கடைசி வரை சிறப்பாக போராடினார்கள் அவர்களுக்கு நன்றி. கடைசி கட்டத்தில் ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது அதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அதுவே எண்களின் தோல்விக்கு காரணமாகவும் மாறியது. விளையாட்டுகளில் இதுவும் ஒரு அங்கம் என்பதால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என்று வில்லியம்சன் கூறினார்

Advertisement