Williamson : இலங்கை அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – வில்லியம்சன் பெருமிதம்

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில்

Williamson
- Advertisement -

உலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில் மோதின.

Nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆன திரிமன்னே 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க பிறகு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இதனால் இலங்கை அணி 29.2 அவர்களுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் வெற்றி அடைந்தது. குப்தில் 73 ரன்களுடனும், மூன்ரோ 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Guptil

போட்டிக்குப்பிறகு வெற்றி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது : இது ஒரு நல்ல துவக்கம் டாசில் வென்று முதலில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்த மைதானத்தில் கடினம். ஆனால், எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்து 30 ஓவர்களிலேயே எதிரணியை முழுவதுமாக ஆட்டமிழக்கச் செய்தனர். என்னை பொறுத்த வரை இந்த மைதானத்தில் எந்த குறையும் கிடையாது புதிய பந்தில் மைதானம் நன்றாக திரும்புகிறது.

nz

இங்கிலாந்து மைதானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான தன்மை உடையது இந்த மைதானத்தில் எங்கள் அணியின் தொடக்க வீரரான முன்ரோ சுதந்திரமாக ஆடினார். ஏகப்பட்ட ஷாட்களை ஆடி அவர் துவக்கத்திலேயே அணிக்கு ரன்களை பெற்றுத் தந்ததால் இந்த குறைவான இலக்கை எளிதாக எங்கள் அணியால் எட்ட முடிந்தது. மேலும் எங்களது பந்து வீச்சாளர்களிடம் நாங்கள் எந்தவித ஆலோசனையும் அறிவுரையும் போட்டி நடுவே வழங்கவில்லை. இதனால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றியை தேர்வு தேடித் தந்தனர் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement