Kane Williamson : இவரின் ஆட்டமே எங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது – வில்லியம்சன்

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Williamson
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதின.

nz vs sa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது : இந்த மைதானம் கொஞ்சம் லேசாகவே இருந்தது. இதனால் இரண்டு அணிகளும் பவுலிங் செய்யவே எதிர்பார்த்தோம். இதுபோன்ற மைதானங்களில் மைதானம் எப்படி செயல்படுகிறது என்று கணித்தால் போட்டி சிறப்பாக அமையும். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தில் பந்து வீச கொஞ்சம் கடினப்ப்பட்டாலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

grandhomme

எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கிராண்ட்ஹோம் அவர் பேட்டிங் செய்ய வரும்பொழுது பதட்டமான சூழ்நிலை இருந்தாலும் அதனை எதிர்கொண்டு அருமையாக விளையாடினார். அவருடைய ஆட்டம் சிறப்பாக அமைந்தது அவருடைய அந்த ரன் குவிப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நான் கூறுவேன். இதன்பிறகு தொடரில் பெரிய போட்டிகள் வருவதால் அதனை எதிர் கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement