என்னைவிட இவரே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார் – பெருந்தன்மையுடன் பாராட்டிய வில்லியம்சன்

Williamson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் கேன் வில்லியம்சன் கூறுகையில் : இது ஒரு கடினமான போட்டியாக இருந்தது. பெங்களூரு போன்ற சிறப்பான அணிக்கு எதிராக வெற்றி பெறுவது ஈஸியானது கிடையாது. இந்த மைதானமும் சேசிங்கிற்கு சற்று கடினமானதாகும். எளிதாக இலக்கை விரட்டக் கூடிய ஒரு மைதானமாக காணப்படவில்லை.

- Advertisement -

holder

இந்த மைதானத்தில் இந்த இலக்கு எங்களுக்கு சவாலான ஒரு விடயமாகவே இருந்தது. இருப்பினும் நாங்கள் பெங்களூர் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி இருந்ததால் சேசிங்ற்கு சற்று சாதகமாக இருந்தது. அதே போன்று அவர்களிடம் இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருந்தனர். அவர்களது பந்துவீச்சில் நாங்கள் விக்கெட் இழக்காமல் விளையாட வேண்டும் என நினைத்தோம்.

நான்காம் இடத்திற்கு வருவது மைதானத்தை கணித்து விளையாட உதவுகிறது. ஹோல்டர் அடித்த சில ஷாட்கள் இந்த வெற்றிக்கு உதவியது. அவர் என்னைவிட கூலாக இந்த போட்டியை அணுகினார். எங்கள் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்தார் என்று வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement