நாங்கள் வெற்றிபெற்றாலும் இவர்கள் இருவரும் இறுதிவரை நின்றால் இந்தியா வெற்றி பெறும் என்று பயந்தேன் – வில்லியம்சன்

Williamson
- Advertisement -

ரிசர்வ் டே ஆன இன்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ind nz

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இந்த உணர்வு மிகவும் வித்தியாசமாக உள்ளது. உலக கோப்பை தொடரில் நாங்கள் அனுபமிக்க அணியாக மாறியதாக உணர்கிறேன். உண்மையில் எங்களது அணி மிக அருமையாக உள்ளது. ரொம்ப கடினமான போட்டி அதுவும் மிக முக்கியமான அரை இறுதியில் நாங்கள் இவ்வாறு விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சூழ்நிலைகளில் சரியாக கணித்து நாங்கள் செயல்பட்டதாக நினைக்கிறேன்.

- Advertisement -

Nz

நாங்கள் குவித்த 240 ரன்கள் எங்களுக்கு இந்திய அணியை கட்டுப்படுத்த போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். புதிய பந்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியின் பேட்டிங்கை அசைத்துப் பார்க்க நாங்கள் பந்துவீச்சில் அழுத்தத்தை அதிகப்படுத்தினோம் அது நன்றாக செயல்பட்டது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினோம் இதன் மூலம் வெற்றி எங்கள் பக்கம் திரும்பியது. இறுதிவரை தோனியும் ஜடேஜாவும் விளையாடினால் இந்திய அணி வெற்றி பெறும் என்றே நினைத்தேன். பின் சரியான நேரத்தில் ஜடேஜாவின் விக்கெட் மற்றும் தோனியின் விக்கெட் கிடைத்தது. இதுவே எங்களது வெற்றிக்கு காரணம் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement