எங்களுக்கு சூப்பர் ஓவர் சரிப்பட்டு வராது. அதைவிட இதை நெனச்சா மனசு வலிக்குது – பாவமாக பேசிய வில்லியம்சன்

Williamson-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.

Rohith

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்து அபாரமாக போராடினார்.

பிறகு சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

bumrah 2

தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது ; சூப்பர் ஓவர் போட்டிகள் எப்பொழுதுமே எங்களுக்கு வெற்றிகரமாக அமைந்தது இல்லை. இது ஒரு சிறப்பான போட்டியாகும் மீண்டும் இந்திய அணி தங்களது அனுபவத்தை இந்த இக்கட்டான சூழ்நிலையில் காண்பித்துள்ளனர். இந்த தோல்வியையும் நாங்கள் எடுத்துக்கொண்டு கடந்து சென்றுதான் ஆகவேண்டும்.

Williamson

இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆரம்பித்த போதும் எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்படி போராடி தோல்வி அடையும் போது வருத்தமாக உள்ளது. மேலும் வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றும் அதனை கடக்கவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டி எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக அமைந்தது என்று புள்ளி வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement