- Advertisement -
உலக கிரிக்கெட்

ரோஹித் யாரா இருந்தாலும் சரி. இந்த போட்டியில் அவருக்கு இதுதான் நடக்கும் – வில்லியம்சன் பேட்டி

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி ஒரு வெற்றிகரமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் இது கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு அணியும் மற்ற அணியை வெல்வதற்காக நினைக்கும், அதற்காகவே போராடும் .வெற்றி என்பது அன்றைய நாளை பொருத்தே அமையும்.

- Advertisement -

அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடி உள்ளதோ அந்த அணி வெற்றி பெறும். மேலும் அரையிறுதிக்கு தகுதியான நான்கு அணிகளும் திறமையான அணிகள் என்றே நான் நினைக்கிறேன். சில போட்டிகளில் தோற்றிருக்கிறோம் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த போட்டியில் இந்திய அணியை வாழ்த்துவதில் மட்டுமே கவனமாக இருக்கிறோம்.

இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஆனாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை இது ஒரு போட்டி தான் இந்த போட்டியில் ஆள் யார் என்பதை பார்க்காமல் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றே நினைக்கிறோம். அதனால் ரோகித் சர்மாவின் இந்த சாதனைகளை மறந்து அவரை எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் ஆரம்பத்திலே வீழ்த்தி விடுவோம் என்று வில்லியம்சன் கூறினார்.

- Advertisement -
Published by