அம்பயர்கள் மீது குறை கூற விரும்ப வில்லை எங்களுக்கு இந்த விதி குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனாலே கோப்பையை இழந்தோம் – வில்லியம்சன்

Williamson

நடப்பு உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஐ.சி.சி யின் இந்த விதி குறித்து பலரும் எதிர்ப்பு கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஓவர்த்ரோவில் வழங்கப்பட்ட 6 ரன்கள் குறித்தும் அந்த விதி குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது : இறுதிப் போட்டியில் நான் கடைசியில் ஓவர்த்ரோ மூலம் 6 ரன்கள் போகும் என்று நினைக்கவில்லை.

- Advertisement -

மேலும் அந்த ஓவர்த்ரோ விதி குறித்த விழிப்புணர்வு எனக்கு இல்லை என்றும் மேலும் அவர்களின் தீர்ப்புகளில் ஒருசில குறை இருக்கும் அவர்களும் மனிதர்கள் தானே அவர்களை எங்கள் அணி தோற்றத்துக்குக் காரணமாக நாங்கள் கூறமாட்டோம் என்று வில்லியம்சன் கூறினார்.

newzeland

ஏனெனில் களத்தில் அம்பயர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது. மேலும் அவர்களுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது அதனால் அவர்களின் முடிவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓவர்த்ரோ குறித்த விதி குறித்த விழிப்புணர்வு வேண்டும். மேலும், அதிர்ஷ்டவசமின்றி நாங்கள் கோப்பையை இழந்தோம் என்றும் அந்த ஓவர்த்ரோ தற்செயலாக ஏற்பட்டது தான் என்றும் வில்லியம்சன் கூறினார்.

- Advertisement -
Advertisement