PAK vs NZ : பாகிஸ்தான் அணியை சேர்ந்த இந்த இருவர் எங்களது வெற்றியை பறித்தனர் – வில்லியம்சன்

உலக கோப்பை தொடரின் 33 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமை

Williamson
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 33 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நீஷம் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

babar harris

தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : எங்கள் அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் சிறப்பாக ரன்களை குவித்தனர். ஆனால் இந்த 230 ரன்கள் என்ற இலக்கினை பாகிஸ்தான் அணி எதிர்த்து நேர்த்தியாக விளையாடியது. அந்த அணியின் பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தனர். இனிவரும் போட்டிகளில் எங்கள் அணிக்கு வெற்றி முக்கியம் எனவே வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க முயற்சிப்போம் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement