Kane Williamson : சூப்பர் ஓவர்களில் பங்கேற்ற அனுபவம் இருந்தும் இதுவே முதல் முறை – வில்லியம்சன்

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Rohith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 58 பந்தில் 69 ரன்களை குவித்தார், ரோஹித் 24 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து டை செய்தது. அந்த அணியின் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.

Manish Pandey

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதற்கடுத்து மும்பை அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி படுத்தினார் பாண்டியா. பிறகு 4 பந்துகளில் 9 ரன்கள் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது : எனக்கு சூப்பர் ஓவரில் பங்கேற்ற அனுபவம் சில உள்ளது. ஆனால், தற்போது தோற்ற அணிய சார்பாக உள்ளேன். மனிஷ் பாண்டே மற்றும் நபி ஆகியோர் போட்டியை நெருக்கமாக கொண்டுசென்றனர். முதல் பாதியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். மேலும், எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் இந்த தோல்வி ஏமாற்றம் தருகிறது.

rashid

சூப்பர் ஓவரில் எத்தனை ரன்கள் வரை குவிப்போம் என்று எதிர்பாத்தேன். மனிஷ் பாண்டே சிறப்பான பார்மில் உள்ளார். ஆனால், எங்களால் 8 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதனால் ரஷீத் கானை பந்துவீச வைக்க நினைத்தேன். ஏனெனில், அவரே எங்கள் அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பவுலர் அதனால் அவரை பந்துவீச செய்தேன். ஆனால், முடிவில் தோல்வி கிடைத்தது ஏமாற்றம் அளித்தது.

Advertisement