இந்திய நிர்வாகம் எடுத்த இந்த முடிவு மிகச்சரியானது. சரியான டைம்ல சரியான முடிவு எடுத்தாங்க – வில்லியம்சன் கருத்து

Williamson
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது முதல்கட்ட போட்டிகள் முடியும் வரை சிறப்பாக நடைபெற்றது. சென்னை மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் முதற்கட்ட போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த தொடரானது டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு இரண்டாவது கட்ட போட்டிகளை நோக்கி நகர்ந்தது. அப்போது தான் இந்த தொடரில் சிக்கல் ஏற்பட ஆரம்பித்தது.

IPL

- Advertisement -

யாரும் எதிர்பாராத வகையில் கொல்கத்தா அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மேலும் பல அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக இந்த தொடரை நிறுத்திய பிசிசிஐ காலவரையின்றி ஒத்திவைத்தது.

மேலும் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் வெளிநாட்டில் வைத்து நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது சரியான முடிவு என்று நியூசிலாந்து அணியின் கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான கேன் வில்லியம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

williamson 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாங்கள் விளையாடிய போது பயோ பபுள் கட்டுப்பாட்டில் தான் இருந்தோம். அப்போது மிகச் சிறப்பாக போட்டிகள் நடைபெற்றன. ஆனாலும் சில மீறல்கள் நடந்து தொடரில் தொற்று பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக பி.சி.சி.ஐ எஞ்சியுள்ள போட்டியை நடத்தாமல் ஒத்திவைத்தது சரியான முடிவு.

williamson

சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து வைரஸ் பரவல் அதிகரிக்கும் முன்னரே இந்த போட்டியை பிசிசிஐ ஒத்திவைத்தது. மேலும் ஒவ்வொரு வீரர்களும் நாடு விரும்புவதில் தங்களது கவனத்தை செலுத்திய பிசிசிஐ அதற்கான சிறப்பான பணியையும் செய்தது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement