வெற்றி பெற்றதும் கோலியின் மார்பில் சாய்ந்தது ஏன் ? – நெகிழ்ச்சியான பதிலை கூறி உருகவைத்த வில்லியம்சன்

Williamson
- Advertisement -

ஐசிசி நடத்திய முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த 18ஆம் தேதி இறுதிப் போட்டியில் மோதின. இந்த இறுதிப் போட்டியில் இரண்டு நாட்கள் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டாலும் போட்டி கடைசி நாளான ரிசர்வ் டே முழுவதுமாக நடைபெற்று நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

WTC

- Advertisement -

இந்த இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை அசால்டாக வீழ்த்திய நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் போது வெற்றிக்கு 139 ரன்கள் தேவை என்ற நிலையில் துவக்க வீரர்கள் கான்வே மற்றும் லதாம் ஆட்டமிழந்து வெளியேற வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியின் வெற்றிக்கான ரன்னை அடித்து முடித்ததும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் நேராக சென்று விராட் கோலியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் தான் ஏன் கோலியின் நெஞ்சில் சாய்ந்தேன் என்பது குறித்து வில்லியம்சன் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

williamson 1

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற அந்த தருணம் மிகச் சிறந்த தருணம். அது அற்புதமான உணர்வை கொடுத்தது. இந்தியா போன்ற பலமான அணியை வீழ்த்துவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். வெற்றிக்குப் பிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டேன். ஏனெனில் கோலிக்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து நாங்கள் ஆழமான நண்பர்கள்.

Williamson-1

எங்களுக்குள் ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. இது எங்கள் இருவருக்குமே தெரியும் என நெகிழ்ச்சியான பதிலை வில்லியம்சன் கூறினார். வில்லியம்சன் கூறிய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி அவர்கள் இருவரது புகைப்படமும் தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement