- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் எங்களின் தோல்விக்கு இதுவே காரணம் – வில்லியம்சன் வேதனை

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இந்த போட்டியில் நிறைய நல்ல விடயங்கள் இருக்கின்றன. இந்த மைதானத்தில் இந்த இலக்கினை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம் தான். அதுமட்டுமின்றி மைதானத்தில் சிறிது பனியும் இருந்தது. இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.

இந்தியா விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து எங்களால் அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்தும் வழியை கண்டறிய வேண்டும். எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். அடுத்த போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by