11 ஆண்டுகால பகையை தீர்க்க களமிறங்க உள்ள வில்லியம்சன் – இப்படி ஒரு பகையா ?

Ind-vs-Nz
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

Williamson

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வில்லியம்சன் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்த மும்முரமாக உள்ளார் என்று தெரிகிறது. ஏனெனில் கோலியும், வில்லியம்சனும் 19 வயதிற்கு உட்பட்ட போட்டிகளில் விளையாடும் போது இந்திய அணிக்காக கோலி கேப்டனாக இருந்தார். மேலும் நியூசிலாந்து அணிக்காக வில்லியம்சன் கேப்டனாக இருந்தார்.

அப்போது 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த அரையிறுதி போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் அந்த உலக கோப்பை தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

williamson

இதனால் இன்றைய அரையிறுதிப்போட்டியில் கோலி அணியை வீழ்த்தி தன் பகையை தீர்த்துக்கொள்ள வில்லியம்சன் மும்முரமாக செயல்படுவார் என்று தெரிகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பாக கோலி மற்றும் ஜடேஜா அதே போன்று நியூசிலாந்து சார்பாக வில்லியம்சன், டிரென்ட் போல்ட் மற்றும் சவுதி ஆகியோர் அப்பொழுது விளையாடினார்கள் இப்போது இவர்கள் அனைவரும் மீண்டும் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement