கோப்பையை தட்டி தூக்கியது மட்டுமின்றி முதலிடம் பிடித்த வில்லியம்சன் – கோலிக்கு எந்த இடம் தெரியுமா ?

Williamson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களில் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி தற்போது 901 புள்ளிகள் பெற்று கேன் வில்லியம்சன் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

taylor

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை அபாரமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்த முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் விளங்கினார். இரண்டு இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் இரண்டாவது இன்னிங்சில் போது இலக்கை துரத்திய நிலையில் ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது 901 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அதற்கடுத்து லாபுஷேன் 878 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

kohli 1

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் விளையாடி வரும் மோசமான ஆட்டம் காரணமாக 812 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். மேலும் இந்த பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி சாம்பியன் கேப்டனாக இருக்கும் வில்லியம்சானுக்கு இந்த முதலிடம் மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement