இறுதி போட்டியில் வில்லியம்சன் ஒரு ரன் அடித்தால் போதும் இமாலய சாதனையை தன் வசப்படுத்தி கொள்வார் – சாதனை விவரம் இதோ

Williamson
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத இருக்கின்றன.

eng vs nz

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதன் முறையாக கோப்பையை வென்று சாதிக்கும். மேலும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியின் பெரும்பாலான ரன்களை வில்லியம்சன் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 548 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரே உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை (548ரன்) தற்போது ஜெயவர்த்தனேவுடன் பகிர்ந்துள்ளார்.

Williamson

நாளைய இறுதிப் போட்டியில் ஒரு ரன் அடித்தால் ஜெயவர்தனேவின் இந்த இமாலய சாதனையை தகர்த்து வில்லியம்சன் புதிய சாதனை படைக்க உள்ளார். மேலும் நாளைய போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த கங்குலியை (3 சதம்)சாதனையை சமன் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement