வார்னரை நீக்கி மிகப்பெரிய தவறை செய்த கேன் வில்லியம்சன். உடனடியாக கிடைத்த தண்டனை – விவரம் இதோ

Williamson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டேவிட் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

srhvsrr

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரன்களை விளாசி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் இந்த போட்டியில் புதிய கேப்டனாக செயல்பட்டுவரும் வில்லியம்சன் செய்த தவறு தற்போது அவருக்கே வினையாக மாறியுள்ளது.

- Advertisement -

அந்த செயல் யாதெனில் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கிய அவர் முகமது நபியை அணியில் இணைத்து இருந்தார். ஒரு முழுநேர ஸ்பின்னரை அணிக்குள் கொண்டு வந்து அவரை இன்று சரியாக வில்லியம்சன் பயன்படுத்தவில்லை என்றே கூறலாம். ஏனெனில் துவக்கத்தில் இருந்தே நபிக்கு ஓவரை கொடுக்காமல் வைத்திருந்த வில்லியம்சன் முகமது நபியை போட்டியின் 15வது ஓவரை வீச சொன்னார்.

williamson 1

அந்த நேரத்தில் இரண்டு வீரர்களும் நன்றாக செட்டாகி இருந்த காரணத்தினால் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. இப்படி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வார்னரை நீக்கிவிட்டு ஒரு ஆல்ரவுண்டர் ஆட வைத்து அவரையும் ஒருவரை மட்டுமே வீச வைத்தது மிகப்பெரிய தவறாக அமைந்தது.

warner 1

அதுமட்டுமின்றி இதேபோன்று 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இருக்கும் பொழுது வார்னர் போன்ற அதிரடி ஆட்டக்காரர் இருந்தால் நிச்சயம் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆனால் அந்த அளவிற்கு முகமது நபியால் அதிரடியாக விளையாட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இந்த போட்டியில் வார்னரை நீக்கியதற்கான தண்டனை வில்லியம்ஸ் சனுக்கு உடனே கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement