தடையிலுருந்து தப்பிய கேன் வில்லியம்சன். இனி எந்த பிரச்சனையும் இல்லை – ஐ.சி.சி அறிவிப்பு

Williamson

கடந்த ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீசினார்.

அவரின் பந்து வீச்சு முறை ஐசிசியின் விதிகளுக்கு மீறி உள்ளது என்று அம்பயர்கள் ஐசிசி-யிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்ற ஐசிசி வில்லியம்சன் பந்துவீச்சில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் மேலும் அவரின் முழங்கை அசைவுகளை சரி செய்யவும் அவருக்கு வேண்டுகோள் வைத்தது.

இதற்காக கடந்த மாதம் இங்கிலாந்து சென்ற கேன் வில்லியம்சன் பந்துவீச பயிற்சி எடுத்து ஐசிசியின் சோதனைகளில் பங்கேற்று பந்துவீசினார். அதன்படி தற்போது அந்த சோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தனது பந்துவீச்சில் உள்ள குறைகளை சரி செய்துள்ளார். மேலும் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு தான் அவரின் முழங்கை இப்போது வளைகிறது. எனவே அவர் இனி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பந்துவீசலாம் என்று அறிவித்தது.

Williamson

மேலும் அவருக்கு தடையின்றி பந்துவீச நாங்கள் அனுமதி அளிக்கிறோம் என்று ஐசிசி நேற்று அறிவித்தது. நியூஸிலாந்து அணி தற்போது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இந்த தொடரில் இடுப்பு வலி காரணமாக வில்லியம்சன் விளையாடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -